Ad Banner
Ad Banner
 பொது

தாய்லாந்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட மலேசியர்கள் 

11/04/2026 02:35 PM

பேங்காக் , ஏப்ரல் 11 (பெர்னாமா) -- பேங்காக் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஓர் இரயிலில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் சுமார் 97 கிலோகிராம் METHAMPHETAMINE ரக போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் மலேசியாவைச் சேர்ந்த மூன்று ஆடவர்களும் கைது செய்யப்பட்டனர்.

அந்த இரயிலில் போதைப்பொருள் அடங்கிய மூன்று பயணப்பெட்டிகளை அதிகாரிகள் கண்டெடுத்ததை தொடர்ந்து, சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டின் மத்திய புலனாய்வுப் பிரிவு CIB தெரிவித்தது.

இரயில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் குற்றங்களைத் தடுப்பதற்குமான முயற்சிகளின் ஒரு பகுதியாக, தாய்லாந்து இரயில்வே, குற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் நெடுஞ்சாலை போலீஸ் பிரிவு ஆகியவற்றுடன் இணைந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக CIB குறிப்பிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மூன்று நபர்கள் அந்தப் பயணப்பெட்டிகளை இரயிலுக்குள் கொண்டு வந்ததை இரயில் ஊழியர்கள் பின்னர் உறுதிப்படுத்தியதாகவும் CIB கூறியது.

பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் உட்பட சந்தேக நபர்கள் மேல் நடவடிக்கைக்காக விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)