Ad Banner
Ad Banner
 பொது

நீரை விரயமாக்குவதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் 

11/04/2026 03:29 PM

ஜெலி, ஏப்ரல் 11 (பெர்னாமா) -- கிளந்தானில் உள்ள பல ஆறுகளின் நீர்மட்டம் குறைந்துள்ளது அம்மாநிலத்தின் நீர் விநியோக அமைப்பில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தின் முதற்கட்ட அறிகுறியாகக் கருதப்படுகிறது.

இருப்பினும் அது இன்னும் நெருக்கடி நிலையை எட்டவில்லை.

நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை, ஜே.பி.எஸ்-இன் ஆய்வின் படி சுங்கை கோலோக்  ஆற்றில் நீர்மட்டம் சுமார் மூன்றில் இருந்து நான்கு மீட்டர் வரை பதிவாகியுள்ளதாக  மலேசிய கிளந்தான் பல்கலைக்கழகத்தின் பருவநிலை, நீர் மற்றும் இயற்கைவள மீள்திறன் ஆய்வுக் குழுவின் தலைவரும் இணைப் பேராசிரியருமான டாக்டர் முஹமட் ஃபாயிஸ் முஹமட் அமின் தெரிவித்தார்.

ஜெலி மற்றும் குவா முசாங் போன்ற உட்புற பகுதிகளில் பெய்த மழையைத் தொடர்ந்து சில மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், வறட்சி நீடித்தால் நிலைமையை கண்காணிக்க வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார்.

"இது நீர் பாதுகாப்பு நெருக்கடியின் முதற்கட்ட அறிகுறி என்று கூறலாம். ஆனால், நாம் இன்னும் முழுமையான நெருக்கடிக்குள் நுழையவில்லை. எனவே, நீர் அமைப்பின் கண்ணோட்டத்தில் நாம் முன்கூட்டியே தயார் நிலைகளைச் செய்ய முடியும். ஏனென்றால், நீர் அமைப்பு குறிப்பாக, ஆற்றைச் சுற்றியுள்ள வானிலை மற்றும் காலநிலையில் ஏற்படும் மாற்றங்களால் பாதிக்கப்படுகிறது," என்றார் அவர்.

நீடித்த வறட்ச்சியினால் நீர் சேமிப்பு அமைப்புகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து, நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று அவர் விளக்கினார்.

இதனால் பயனீட்டாளர்களுக்கான சுத்திகரிக்கப்படாத நீர் விநியோகத்திலும் பாதிப்பு ஏற்படும் என்று டாக்டர் முஹமட் கூறினார்.

ஆகவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கல்  தொடர்ச்சியான கண்காணிப்பையும், பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப  நீர் வள நிர்வகிப்பை வலுப்படுத்துவதையும் அவர் பரிந்துரைத்தார்.

மேலும், நீர் வளங்கள் குறைந்து வருவதால், நீரை விரயமாக்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

 -- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)