புத்ராஜெயா, ஏப்ரல் 14 (பெர்னாமா) -- நாடு முழுவதும் உள்ள சில பெட்ரோல் நிலையங்களில் நிலவும் பெட்ரோல் தட்டுப்பாடு, நாட்டின் உண்மையான எரிபொருள் விநியோக நிலையைப் பிரதிபலிக்கவில்லை.
இது ஒரு தனிப்பட்ட சூழ்நிலையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
விநியோகக் தட்டுப்பாடு என்பது விநியோகிப்பாளர்களிடம் இருந்து எரிபொருள் அனுப்புவதில் ஏற்பட்ட போக்குவரத்து சிக்கல்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நிலையங்களில் ஏற்பட்டிருக்கும் அதிகமான தேவை என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
"அவை தனிப்பட்ட பிரச்சனைகள் என்று நினைக்கிறேன். அது விநியோகம் இல்லாததால் அல்ல. விநியோகத்தில் சிக்கல் இருக்கலாம். ஒருவேளை பெட்ரோல் நிலையங்களில் கையிருக்கும் முடிந்திருக்கலாம். விநியோகிப்பாளர்களிடம் இருந்து வரும் விநியோகங்கத்தில் பிரச்சனை இருக்கலாம். அதனால், நாட்டில் கையிருப்பு முடிந்துவிட்டது என்று அர்த்தமல்ல,"என்றார் அவர்.
நாட்டில் எரிபொருள் கையிருப்பு இன்னும் போதுமானதாகவே உள்ளது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருவதையும் அந்தோணி லோக் எடுத்துரைத்தார்.
தடையில்லா விநியோகத்தை உறுதி செய்வதற்காக எண்ணெய் நிறுவனங்களும் விநியோகிப்பாளர்களும் இந்த நிலைமையைக் கவனிப்பதோடு, உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சும் இதனை அவ்வப்போது கண்காணிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)