Ad Banner
 பொது

ஈ.டி.எஸ் & ஈ.ஆர்.டி சேவையைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு 30 விழுக்காடு கழிவு

14/04/2026 05:52 PM

புத்ராஜெயா, 14 ஏப்ரல் (பெர்னாமா) -- மேற்கு ஆசிய நெருக்கடியின் காரணமாக எரிபொருள் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து, அனைத்து வழித்தடங்களுக்கான மின்சார ரயில் சேவை ஈ.டி.எஸ் மற்றும் ஜே.பி சென்ட்ரல் – தும்பாட் – ஜே.பி சென்ட்ரல்கான ஈ.ஆர்.டி ரயில் சேவையைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு 30 விழுக்காடு கழிவு வழங்கப்படும்.

போக்குவரத்து செலவுகளின் சுமையைக் கணிசமாக குறைக்கும் வகையில், அதிகமான மக்கள் ரயில் சேவையைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

மேலும், வசதியான, பாதுகாப்பான மற்றும் திறமையான ரயில் சேவையின் மூலம் பொது போக்குவரத்தின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக, போக்குவரத்து அமைச்சு மற்றும் Keretapi Tanah Melayu நிறுவனம், கே.டி.எம்.பி ஆகியவற்றின் வழியாக அரசாங்கம் மேற்கொள்ளும் ஓர் முயற்சியாகும்.

ஒவ்வொரு திங்கள் முதல் வியாழன் வரைக்குமான பயணத்திற்கு இந்த கழிவு வழங்கப்படுவதாக அந்தோணி லோக் தெரிவித்தார்.

''இச்சலுகையைப் பெற வாடிக்கையாளர்கள் ஏப்ரல் 15 முதல் இவ்வாண்டு அக்டோபர் 14 வரை, 15 ஏப்ரல் 2026 முதல் 30 ஏப்ரல் 2026 வரை கே.டி.எம்.பி அறிவிக்கும் விளம்பர குறியீட்டைப் பயன்படுத்தி பயணச் சீட்டுகளை வாங்க வேண்டும். எனவே, நாளை முதல் நமது மக்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு எந்தவொரு வழித்தடத்திற்கான ஈ.டி.எஸ் டிக்கெட்டுகளை வாங்கலாம்,'' என்றார் அவர்.

அதிக தேவை உள்ள நேரங்களில் ரயில் கொள்ளவை சீராக நிர்வகிப்பதை உறுதி செய்வதற்காக பள்ளி விடுமுறை நாட்கள், பொது விடுமுறைகள் போது ஈ.டி.எஸ் வர்த்தக பிரிவு டிக்கெட், முதல் வகுப்பு மற்றும் ஈ.ஆர்.டி-இன் உறங்கும் செவைகளுக்கு இச்சலுகைப் பொருந்தது.

இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)