Ad Banner
 உலகம்

ஹோர்முஸ் நீரிணயைக் கடந்து இந்தியக் கடல் பகுதியை அடைந்தது 'ஜாக் விக்ரம்'

16/04/2026 05:35 PM

குஜராத், 16 ஏப்ரல் (பெர்னாமா) --  இந்தியக் கொடியை ஏந்திய 'ஜாக் விக்ரம்' எனும் எல்.பி.ஜி கப்பல், சுமார் 20 ஆயிரத்து 400 மெட்ரிக் டன் திரவ பெட்ரோலிய வாயுவை ஏற்றி முக்கிய கடல் பாதையான ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து குஜராத்தின் கண்ட்லா துறைமுகம் சென்றடைந்தது.

அமெரிக்க இராணுவம் ஈரானின் துறைமுகங்களை முற்றுகையிட்டிருக்கும் சூழலில் அக்கப்பல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணித்து, செவ்வாய்க்கிழமை இந்தியக் கடல் பகுதியை அடைந்ததாக MarineTraffic கப்பல் கண்காணிப்புத் தரவு காட்டியது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் போரைத் தொடங்கியதிலிருந்து ஹோர்முஸ் நீரிணையில் பயணிக்க தனது சொந்தக் கப்பல்களைத் தவிர மற்ற அனைத்துக் கப்பல்களுக்கும் ஈரான் தடை விதித்தது.

தற்காலிய போர் நிறுத்தத்திற்கு பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து இந்தியா வந்தடைந்த முதல் கப்பலாக 'ஜாக் விக்ரம்' உள்ளது.

மற்றுமொரு நிலவரத்தில், ஈரானிய துறைமுகங்களுக்குச் செல்லும் கப்பல்களுக்கு அமெரிக்கா தடை விதித்திருந்தபோதிலும், அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட இரண்டாவது சூப்பர் டென்கர் கப்பல் ஒன்று ஹோர்முஸ் நீரிணை வழியாக வளைகுடாவிற்குள் நுழைந்ததைக் கப்பல் போக்குவரத்துத் தரவுகள் காட்டுகின்றன.

இந்நிலையில், முற்றுகை தொடங்கியதிலிருந்து 10 கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)