மியன்மார், 17 ஏப்ரல் (பெர்னாமா) -- மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூச்சியின் சிறைத்தண்டனையை அந்நாட்டு அரசாங்கம் குறைத்திருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.
80 வயதான ஆங் சான் சூச்சி 27 ஆண்டுகாலச் சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் நிலையில், அவரது தண்டனை ஆறில் ஒரு பங்கு குறைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பல்வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டு நோபல் பரிசு பெற்ற அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இருப்பினும், அவரின் அரசியல் வாழ்க்கையை முடக்கும் நோக்குடன் குற்றங்கள் சுமத்தப்பட்டதாக அவரின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
இதனிடையே, மியன்மாரின் புதிய அதிபர் மின் ஆங் ஹ்லெயிங், சிறையில் உள்ள நான்காயிரத்திற்கும் அதிகமான கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ள நிலையில், அந்நாட்டின் முன்னாள் அதிபர் யூ வின் மின்ட்டும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆறு மாதங்களில் மூன்றாவது முறையாக கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]