Ad Banner
 உலகம்

இந்தோனேசியாவில் ஹெலிகாப்டர் விபத்து; எண்மர் பலி

17/04/2026 07:56 PM

மெலாவி, 17 ஏப்ரல் (பெர்னாமா) -- இந்தோனேசியாவில் காணாமல் போன ஹெலிகாப்டரில் பயணித்த எண்மர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, மேற்கு கலிமந்தான் மாகாணத்தில் அந்த ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக, சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மரணமடைந்தவர்களில் நால்வரின் உடல்கள் விபத்து நிகந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டதாக, மீட்பு அதிகாரி லுத்தெனன்ட் கெனல் கிண்டா கூறினார். 

இந்நிலையில், மூவரின் உடல்கள் ஹெலிகாப்டரின் சிதைவுகளுக்குள் சிக்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார். 

எஞ்சிய ஒருவரின் உடல் இன்னும் தேடப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். 

இருள் சூழ்ந்திருந்ததால் மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு, இன்று காலை மீண்டும் தொடங்கின. 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]