ஜாலான் டத்தோ ஓன், 21 ஏப்ரல் (பெர்னாமா) -- வேலைவாய்ப்புகள், கடனுதவிகள் மற்றும் பொருளாதார ஆதரவைப் பெறுவதில் இன்னும் தடைகளை எதிர்கொள்ளும் பின்தங்கிய பிரிவினருக்கு உதவுவதற்காக அரசாங்கம் கூடிய விரைவில் கூடுதல் நடவடிக்கைகளை அறிவிக்கும்.
முதன்மை கடனுதவி செயல்முறையில் இருந்து பின்தங்கிய வேலையில்லாத பட்டதாரிகள், மாணவர்கள், சிறு வணிகர்கள், நடைபாதை வியாபாரிகள் மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஆகியோர் அந்த பரிந்துரையில் அடங்குவர் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
''மேலும், அண்மையில் நாங்கள், அரசு சார்ந்த முதலீட்டு நிறுவனங்கள், GLICs-உடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளோம். வேலையில்லாத பட்டதாரிகள் அல்லது டிப்ளோமா பட்டதாரிகள் உள்ளிட்ட வேலைவாய்ப்புகளில் இருந்து பின்தங்கிய பிரிவினருக்கான கூடுதல் நடவடிக்கைகளை நான் விரைவில் அறிவிப்பேன்'', என்றார் அவர்.
பொருளாதார வளர்ச்சியின் பலன்களைக் குறிப்பாக நலிவடைந்த பிரிவினரும் சிறுதொழில் நிறுவனங்களும் முழுமையாகப் பெறுவதை அரசாங்கம் உறுதி செய்யவிருப்பதாகவும் அன்வார் இப்ராஹிம் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)