Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

முதல் நிலை வெப்ப அலையை எதிர்நோக்கிய 15 வெப்பப் பகுதிகள் கண்காணிக்கப்படுகின்றன

27/04/2026 04:10 PM

கோலாலம்பூர், 27 ஏப்ரல் (பெர்னாமா) --  நாடு முழுவதும் தற்போது முதல் நிலை வெப்ப அலையை எதிர்நோக்கி இருக்கும் 15 ஆபத்தானப் பகுதிகளை இயற்கைவளம் மற்றும் இயற்கை நிலைத்தன்மை அமைச்சு, NRES தொடர்ந்து கண்காணித்து வருகின்றது.

உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய மலேசிய வானிலை ஆய்வு மையம், தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனம், மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் கண்காணிப்புப் பணிகள் ஒருங்கிணைந்த முறையில் மேற்கொள்ளப்படுவதாக அதன் துணை அமைச்சர் சைட் இப்ராஹிம் சைட் நோ தெரிவித்தார்.

"எனவே, நாங்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகளைச் செயல்படுத்தும்போதே கண்காணிப்பும் மேற்கொள்ளப்படுகிறது. உதாரணத்திற்கு, தீயை அணைப்பதற்காக மேக விதைப்பு செய்வது போன்றவை. எனவே, இது போன்ற விஷயங்கள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என்று நான் நினைக்கிறேன்", என்றார் அவர்.

இன்று கோலாலம்பூரில் எரிசக்தி நிர்வகிப்பு தங்கத் தரச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தப் பின்னர் சைட் இப்ராஹிம் செய்தியாளர்களிடம் பேசினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)