வாஷிங்டன் டி.சி., மே 02 (பெர்னாமா) -- அமெரிக்கா உடனான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியம் கடைப்பிடிக்கவில்லை என்று குற்றம் சாட்டிய அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப்,
அடுத்த வாரம் தொடங்கி அந்நாட்டில் இருந்து வரும் கார்கள் மற்றும் லாரிகள் மீதான வரியை 25 விழுக்காடாக உயர்த்தப் போவதாக கூறியிருக்கின்றார்.
அமெரிக்காவில் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டால் எவ்விதமான வரிகளும் விதிக்கப்படாது என்று மீண்டும் வலியுறுத்திய டிரம்ப், அந்த அறிவிப்பைச் செய்தார்.
"மேலும், அவர்களும் மற்ற ஐரோப்பிய நாடுகளும் எங்களின் வர்த்தக ஒப்பந்தத்தைக் கடைப்பிடிக்காத காரணத்தால் மிகவும் அழகான நாடான ஜெர்மனிக்கு நாங்கள் அறிவித்தோம். அவர்கள் நமது வர்த்தக ஒப்பந்தத்தைக் கடைப்பிடிக்கவில்லை. ஸ்காட், நான், ஹோவர்ட் மற்றும் நமது சிறந்த மக்கள் அனைவரும் சேர்ந்து ஒரு வர்த்தக ஒப்பந்தத்தைச் செய்தோம். ஜெமிசன், நாம் அனைவரும் ஒரு சிறந்த வர்த்தக ஒப்பந்தம் செய்தோம். ஆனால், ஐரோப்பிய ஒன்றியம் அதனை கடைப்பிடிக்கவில்லை. எனவே, அமெரிக்காவிற்குள் வரும் அனைத்து கார்கள் மற்றும் லாரிகள் ஆகியவற்றிற்கான வரிகளை 25 விழுக்காடு அதிகரித்துள்ளோம்,'' என்றார் அவர்.
கடந்தாண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வாகனங்கள் மீதான வரியை 15 விழுக்காடாக டிரம்ப் நிர்வாகம் குறைத்ததாக அவர் கூறினார்.
இதனிடையே, ஐரோப்பிய ஒன்றிய கார்களுக்கான ஒட்டுமொத்த வரி முன்னதாக 27.5 விழுக்காடு விதிக்கப்பட்ட நிலையில், அதில் துறை சார்ந்த கட்டணம் 25 விழுக்காடும், நடப்பில் இருந்த 2.5 விழுக்காடு வரியும் அடங்கும் என்று டிரம்ப் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)