Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

உலகக் கிண்ண காற்பந்து போட்டி; அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளர்களாக ஆர்.டி.எம்

06/05/2026 05:55 PM

புத்ராஜெயா, 06 மே (பெர்னாமா) -- மலேசியாவில், 2026-ஆம் ஆண்டு ஃபிஃபா உலகக் கிண்ண காற்பந்து போட்டியின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளர்களாக மலேசிய தொலைக்காட்சி வானொலி, ஆர்.டி.எம் மற்றும் யூனிஃபை டிவி ஆகியவை செயல்படும்.

இந்தப் போட்டியை மக்கள் அனைவரும் கண்டு களிக்க முடியும் என்பதை உறுதி செய்யும் அரசாங்கத்தின் முயற்சிகளில் இதுவும் ஒன்று என தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

உயர்தர ஒளிபரப்பை உறுதி செய்வதற்கும், நாடு தழுவிய பார்வையாளர்களைப் பரவலாகச் சென்றடைவதற்கும், தனியார்த் துறையுடனான ஒத்துழைப்புடன் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

''அனைத்து 104 போட்டிகளின் விரிவான ஒளிபரப்பும் யூனிஃபை டிவியில் நேரலையாக ஒளிபரப்பப்படும், அதே நேரத்தில் ஆர்டிஎம் பெரும்பாலான போட்டிகளை நேரலையாகவோ அல்லது தாமதமாகவோ ஒளிபரப்பும். இது ரசிகர்களுக்குப் பல்வேறு தேர்வுகளை வழங்குகிறது,'' என்று  ஃபஹ்மி கூறினார்.

இந்த நோக்கத்திற்காக, முன்னரே ஒப்புதல் அளிக்கப்பட்ட இரண்டு கோடியே 40 லட்சம் நிங்கிட்டை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாகவும் அவர் விவரித்தார்.

மெக்சிகோ மற்றும் கனடாவுடன் இணைந்து அமெரிக்கா ஏற்று நடத்தும் 2026-ஆம் ஆண்டு FIFA உலகக் கிண்ண காற்பந்து போட்டியின் தொடக்க ஆட்டம் ஜூன் 11-ஆம் தேதி மெக்சிகோவிலும் இறுதிப் போட்டி ஜூலை 19-ஆம் தேதி நியூ ஜெர்சியிலும் நடைபெற உள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)