Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

மூன்று யானைகளை கூடிய விரைவில் திரும்பக் கொண்டுவருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்

04/05/2026 07:04 PM

கோலாலம்பூர், 04 மே (பெர்னாமா) -- ஜப்பான், ஒசாகாவிலிருந்து டாரா, அமோய் மற்றும் கெலாட் ஆகிய மூன்று மலேசிய யானைகளை கூடிய விரைவில் திரும்பக் கொண்டுவருவது தொடர்பாக, பகாங் மாநில அரசாங்கம், தைப்பிங் மிருகக்காட்சிசாலை மற்றும் 'நைட் சஃபாரி' நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும்.

சம்பந்தப்பட்ட விலங்குகளின் நலன் குறித்த பொதுமக்களின் பதற்றத்தைக் கருத்தில் கொண்ட பிறகு, அனைத்து யானைகளையும் திரும்பக் கொண்டுவரும் நடவடிக்கை தற்போது மாநில அரசாங்கம் கவனம் செலுத்துவதாக பகாங் மந்திரி புசார், டத்தோ ஶ்ரீ வான் ரொஸ்டி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

''எனவே, சம்பந்தப்பட்ட தரப்பினர் அப்பிரச்சனையைத் திரும்பக் கொண்டுவர வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். தற்போது அதற்கான பணிகளில் ஈடுபட்டு வரும் நாங்கள், இந்தப் பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும் என்று நம்புகிறோம்,'' என்றார் அவர்.

திங்கட்கிழமை, பெர்னாமா டிவியின் 'ருவாங் பிச்சாரா' நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, ​​வான் ரொஸ்டி பெர்னாமாவிடம் இவ்வாறு கூறினார்.

சமூக ஊடகத்தைப் பயன்படுத்துபவர்களின் கவலைகள் நியாயமானவையே என்றும், குறிப்பாக ஜப்பானில் நிலவும் கடுமையான வானிலை மாற்றங்களையும், அந்த யானைகளின் பூர்வீக வாழ்விடமான தெமர்லோவில் உள்ள கோலா கண்டா தேசிய யானைகள் பராமரிப்பு மையத்திற்குப் பொருந்தாத சூழலையும் அவை எதிர்கொண்டு வரும் நிலையில் இந்தக் கவலைகள் எழுவதாக அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)