Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

ஹுனான் பட்டாசு தொழிற்சாலையில் வெடிவிபத்து; 21 பேர் பலி

05/05/2026 05:55 PM

ஹுனான், 05 மே (பெர்னாமா) -- மத்திய சீனாவின் ஹுனான் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 21 உயிரிழந்த நிலையில், 61 பேர் காயமடைந்தனர். 

உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை மாலை மணி 4.43 அளவில் இவ்வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.  

480-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், மூன்று மீட்பு எந்திரங்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, முதல் கட்டத் தேடல் நடவடிக்கைகளுக்குப் பிறகு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மீட்புப் படையினர் உறுதிப்படுத்தினர். 

சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்குப் பொறுப்பான நபர் கைது செய்யப்பட்டுள்ள வேளையில், சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)