புத்ராஜெயா, 05 மே (பெர்னாமா) -- நாட்டில், சில குறிப்பிட்ட பகுதிகளில் நிலவி வரும் வறண்ட பருவத்தைத் தொடர்ந்து, வட தீபகற்பத்தில் மேக விதைப்பு நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு மலேசிய அரச விமானப்படை, R-M-A-F மற்றும் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, J-B-P-M ஆகியவற்றுக்கு பிரதமர் இன்று உத்தரவிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட அந்நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என நிதியமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
வழக்கத்தை விட அதிகரித்துள்ள நீண்டகால வறண்ட பருவம், விவசாயிகளை வெகுவாகப் பாதித்துள்ளது.
இவ்விவகாரம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மழையைத் ஏற்படுத்த, மேக விதைப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும்பிரதமர் தெரிவித்தார்.
"குறிப்பாக கெடாவின் வடப்பகுதியில், வழக்கத்தை விட நீண்ட வறண்ட பருவத்தை நாம் எதிர்கொண்டுள்ளோம் என்பதும், அது விவசாயிகளுக்கும் நெல் வயல்களுக்கும் சிரமங்களை ஏற்படுத்துகிறது என்பதும் எங்களுக்குத் தெரியும். பொது விதைப்பு மற்றும் மேக விதைப்பு ஆகியவற்றை RMAF மூலம் அதிகரிக்க நாங்கள் உத்தரவிட்டுள்ளோம். மேலும், ஒப்பீட்டளவில் குறைந்த திறன் கொண்ட தீயணைப்புப் படையையும் அடுத்த சில நாட்களுக்குத் தங்கள் பணிகளைத் தொடருமாறு நான் கேட்டுக்கொண்டுள்ளேன்," என்றார் அவர்.
உலகளாவிய விநியோக நெருக்கடி குறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் அவர் அவ்வாறு கூறினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]