Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

MYNIISE மாற்று காலத்தில் இடையூறுகளைக் குறைக்க அமைச்சு முயற்சி

08/05/2026 04:53 PM

ஜோகூர் பாரு, 08 மே (பெர்னாமா) -- மலேசிய குடிநுழைவு செயல்முறை, MyIMMs-சில் இருந்து தற்போது இறுதிக்கட்ட அமலாக்கத்தில் உள்ள தேசிய ஒருங்கிணைந்த குடிநுழைவு செயல்முறை, MyNIISe மாறும் காலக்கட்டம் முழுவதும் ஏற்படும் எந்தவொரு இடையூறுகளையும் அல்லது சிக்கல்களையும் குறைப்பதற்கு உள்துறை அமைச்சு முயற்சிக்கும்.

பத்தாண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்ட அந்த பழைய செயல்முறைக்கு பதிலாக, MyNIISe அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது சுல்தான் இஸ்கண்டார் கட்டிடம், பி.எஸ்.ஐ மற்றும் சுல்தான் அபு பகார் வளாகம், கே.எஸ்.ஏ.பி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நுழைவாயில்களில் அடிக்கடி சிக்கல்களை ஏற்படுத்தி வந்ததாகவும் உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

"இடையூறுகள் ஏற்படாது என்று என்னால் உறுதியளிக்க முடியாது ஏனென்றால், இது நாம் அதிக காலமாகப் பின்பற்றி வரும் ஒரு பழைய செயல்முறை. அதனால்தான் நாங்கள் இப்போது ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறோம்", என்றார் அவர்.

அடுத்த செப்டம்பரில் நாட்டின் நுழைவாயில்களில் முழுமையாகச் செயல்படுத்தப்படவிருக்கும் MyNIISE செயல்முறை, முக அடையாளம், QR குறியீடு மற்றும் கடப்பிதழ் ஆகிய மூன்று முறைகள் மூலம் அனுமதியை வழங்கும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)