கோலாலம்பூர், 12 மே (பெர்னாமா) -- தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பதவியேற்ற பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான ச.ஜோசப் விஜய்க்கு டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டார்.
மலேசியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நெருங்கிய உறவுகள் நிலவுவதாகவும், விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவதில் தாம் முனைப்புடன் இருப்பதாகவும், இன்று தமது அதிகாரப்பூர்வ முகநூல் பதிவில் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, அரசதந்திர உறவுகள் குறித்து பகிர்ந்து கொண்ட பிரதமர், மலேசியாவும் தமிழ்நாடும் தலைமுறை தலைமுறையாக நீடிக்கும் ஆழமான வரலாறு, கலாச்சாரம் மற்றும் மக்கள் உறவுகளைக் கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)