ஜார்ஜ்டவுன், மே 12 (பெர்னாமா) -- இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் எல் நீனோ காரணமாக நிலவும் வெப்ப காலத்தில் மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் பொருட்டு பினாங்கில், முதியவர்கள், சிறார்கள் மற்றும் நீண்ட காலமாக நாள்பட்ட நோயால் அவதியுறும் நோயாளிகள் மீது கவனம் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
.
சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க இந்த அணுகுமுறை அமைந்திருப்பதாக அம்மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ எஸ்.சுந்தரராஜூ தெரிவித்தார்.
மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் எச்சரிக்கைகளின் அடிப்படையில் பினாங்கு மாநில சுகாதாரத் துறை வெப்பம் தொடர்பான நோய்களைக் கண்காணிக்கும் என்று சுந்தரராஜூ தெரிவித்தார்.
மேலும், வெப்பமான காலநிலையின் போது தங்களை பாதுகாத்துக்கொள்ள பொதுமக்களுக்கு தொடர்ந்து சுகாதார ஆலோசனைகள் மற்றும் விழிப்புணர்வு கல்வியும் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
"தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனத்தின் நிவராண உதவித் தொகையான B-W-I திட்டத்தின் மூலம், பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரிங்கிட்டும், மரணம் ஏற்பட்டால் பத்தாயிரம் ரிங்கிட்டும் வழங்கப்படுகிறது," என்றார் அவர்.
பினாங்கில் எல் நினோ மாற்றத்தால் ஏற்படக்கூடிய கடுமையான வெப்பத்தை எதிர்கொள்வதற்கான மாநில அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மற்றும் நடைமுறையில் உள்ள பொது சுகாதாரத் திட்டம் குறித்து சுங்கை டுவா சட்டமன்ற உறுப்பினர் முஹமட் ஃபவுசி யூசோப் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)