Ad Banner
Ad Banner
 பொது

மக்களவையின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக டாக்டர் அஹ்மட் சம்சூரி நியமனம்

16/05/2026 05:58 PM

கோலாலம்பூர், 16 மே (பெர்னாமா) -- மக்களவையின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக திரெங்கானு மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சம்சூரி மொக்தார், நியமிக்கப்பட்டுள்ளார்.

டத்தோ ஶ்ரீ ஹம்சா சைனுடினுக்குப் பதிலாக அவரது நியமனம் அமைந்துள்ளது.

கெமாமான் நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் அஹ்மட் சம்சூரியை அப்பதவியில் நியமிக்க இன்று பெரிக்காத்தான் நேஷனல், PN உச்சமன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக டத்தோ ஶ்ரீ தகியுடின் ஹசான் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.

மேலும், டாக்டர் அஹ்மட் சம்சூரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் PN தலைவர்களை நியமிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாகவும், அதில் பெர்சாத்து பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ முஹமட் அஸ்மின் அலி,சிலாங்கூர் மாநில PN தலைவராக நியமிக்கப்பட்டதாகவும் தகியுடின் தெரிவித்தார்.

இருப்பினும், நெகிரி செம்பிலான் மாநிலத்திற்கான PN தலைவர் நியமனம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)