ஹூஸ்டன், 21 ஜூன் (பெர்னாமா) -- 2026 உலகக் கிண்ண காற்பந்து போட்டியின் எஃப் பிரிவு ஆட்டங்களில் நெதர்லாந்து, சுவீடன், துனிசியா மற்றும் ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் மோதின.
அதில், நெதர்லாந்தும் ஜப்பானும் எதிர்பாரா வகையில், அதிக கோல்களை அடித்து தங்கள் எதிரணியைத் திக்குமுக்காடச் செய்தன.
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் சுவீடனோடு களம் கண்ட நெதர்லாந்து 5-1 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்றது.
அதில், தலா இரு கோல்கள் அடித்து, கோடி ஒக்போ மற்றும் பிரையன் போபி ஆகியோர் அரங்கின் கவனம் ஈர்த்தனர்.
முந்தைய ஆட்டத்தில், ஜப்பானுக்கு எதிராகச் சமன் கண்ட நெதர்லாந்து தற்போது முதல் வெற்றியைப் பதிவு செய்தது
இதனிடையே உலகக் கிண்ண வரலாற்றில் பதிவான 1,000-வது ஆட்டத்தில் ஜப்பானும் துனிசியாவும் சந்தித்தன.
அதில், 4-0 எனும் கோல் கணக்கில் ஜப்பான் வெற்றிகண்டது.
ஆட்டத்தின் 4வது நிமிடத்திலேயே கோல் போடத் தொடங்கிய ஜப்பான் முதல் பாதியில் இரு கோல்களையும் இரண்டாம் பாதியில் மேலும் கோல்களையும் அடித்தது.
ஈ பிரிவில், கனடாவில் டொராண்டோ அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில், ஐவரி கோஸ்ட்டை 2-1 எனும் கோல்களில் வீழ்த்தி ஜெர்மனி தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.
அதனைத் தொடர்ந்து விளையாடிய ஈகுவடாரும் குரசசௌ அணிகள் கோல்கள் ஏதுமின்றி ஆட்டத்தைச் சமநிலையில் முடித்தன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)