Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

பாலியல் தொந்தரவு; அதிகம் பாதிக்கப்படுவது ஆண்கள்

19/05/2026 05:25 PM

ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான், 19 மே (பெர்னாமா) -- பாலியல் தொந்தரவு சம்பவங்கள் தொடர்பில் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்கள் என்பது மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சின் புகாரளிப்பு மையம் பெற்றிருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்களின் வழி தெரிய வந்துள்ளது. 

அரச மலேசிய போலீஸ் படையும் இதேபோன்ற எண்ணிக்கை அதிகரிப்பைப் பதிவு செய்திருக்கும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களை முன்வந்து புகார் அளிக்க ஊக்குவிக்கும் அமைச்சின் விழிப்புணர்வு திட்டத்தின் செயல்திறனை இது நிரூபிப்பதாக அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ நேன்சி ஷுக்ரி கூறினார்.

பாதிக்கப்பட்ட ஆண்கள் தெரிவித்த உடல்ரீதியான பாலியல் சீண்டல்களில் அவர்களின் அனுமதியின்றி உடலின் குறிப்பிட்ட பாகங்களைத் தொடும் செயலும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

''இந்த பாலியல் தொந்தரவு சம்பவங்களில் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் ஈடுபட்டுள்ளனர். எனவே, அவர்கள் ஆணா பெண்ணா என்பதைப் பொருட்படுத்தாமல் நாம் பாலினத்தை மதிக்க வேண்டும். மேலும், ஆண்களும் பெண்களைப் போலவே நடத்தப்படுவதை விரும்புவதில்லை. ஆகவே, அடுத்தகட்ட நடவடிக்கைக்காக அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்துகொள்ளும் வகையில், இதற்காக நாம் குரல் கொடுக்க வேண்டும்,'' என்று நேன்சி தெரிவித்தார்.

இன்று, கோலாலம்பூரில் நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் தொடர்பான பிரச்சார நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த பிறகு அவர் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)