Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

கள்ளப்பண பரிமாற்றம் தொடர்பான 12 குற்றச்சாட்டுகள்; சபா மாநில நீர்வளத் துறையின் முன்னாள் இயக்குநர் குற்றவாளி

19/05/2026 06:26 PM

கோத்தா கினபாலு, 19 மே (பெர்னாமா) -- பத்து ஆண்டுகளுக்கு முன்னர் 4 கோடியே 50 லட்சம் ரிங்கிட்டுக்கும் அதிகமான கள்ளப்பண பரிமாற்றம் செய்ததாகச் சுமத்தப்பட்ட 12 குற்றச்சாட்டுகள் அனைத்திலும் சபா மாநில நீர்வளத் துறையின் முன்னாள் இயக்குநர் குற்றவாளி என்று கோத்தா கினபாலு செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

63 வயதான அக் முஹமட் தாஹிர் முஹமட் தாலிபிற்கு எதிரான வழக்கை அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதைத் தொடர்ந்து நீதிபதி அபு பாகார் மனாட் அத்தீர்ப்பை வழங்கினார்.

இருப்பினும், அக் முஹமட் தாஹிரின் மனைவியான 61 வயது ஃபௌசியா பியூட்டை அதே 19 குற்றச்சாட்டுகளிலிருந்து நீதிமன்றம் விடுவித்து விடுதலைச் செய்தது.

அதே வேளையில், எதிர் தரப்பு, இவ்வழக்கைச் சந்தேகத்திற்கு இடமின்றி வெற்றிகரமாக நிரூபித்ததைத் தொடர்ந்து, அதேபோன்ற நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த அத்துறையின் முன்னாள் துணை இயக்குநர், 72 வயதான லிம் லாம் பெங் விடுவிக்கப்பட்டார்.

இதனிடையே, கள்ளப்பண பரிமாற்றம் தொடர்பான இரண்டு கூட்டுக் குற்றச்சாட்டுகளிலிருந்து அக் முஹமட் தாஹிர் மற்றும் அவரது மனைவியை நீதிமன்றம் விடுவித்தது.

2016-ஆம் ஆண்டு அக்டோபர் 4 முதல் நவம்பர் 4 வரையிலும், 2016-ஆம் ஆண்டு அக்டோபர் 13 முதல் நவம்பர் 8 வரையிலும், சபா மற்றும் கோலாலம்பூர் சுற்றியுள்ள பகுதிகளில் அக்குற்றங்களைச் செய்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

2001-ஆம் ஆண்டு கள்ளப் பணப் பரிமாற்றம், பயங்கரவாதம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் பணம் பெறும் சட்டம், செக்‌ஷன் 4 உட்பிரிவு 1 உட்பிரிவு பி-யின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)