Ad Banner
Ad Banner
 பொது

எந்தவொரு தரப்பினரின் விருப்பங்களுக்கும் பாஸ் கட்சி அடிபணியாது

22/05/2026 07:06 PM

மாராங் , மே 22 (பெர்னாமா) -- பாஸ் கட்சியின் அரசியல் திசையைத் தீர்மானிப்பதில், பெர்சத்து உட்பட எந்தவொரு தரப்பினரின் விருப்பங்களுக்கும் பாஸ் கட்சி அடிபணியாது.

பெர்சத்து எடுத்த ஒவ்வொரு எதிர்மறையான நடவடிக்கையையும் தங்கள் கட்சி விரிவாக ஆய்வு செய்யும் என்று பாஸ் கட்சி தலைவர் டான் ஶ்ரீ அப்துல் ஹடி அவாங் கூறினார்.

அவ்விரு கட்சிகளும் தங்களின் அரசியல் ஒத்துழைப்பில் ஒருமித்த கருத்தை எட்டத் தவறினால், 16வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பெர்சத்து கட்சி இல்லாமல் முன்னோக்கிச் செல்லும் சாத்தியத்தை பாஸ் கட்சி மறுக்கவில்லை.

கட்சியின் அடைவுநிலையைப் பாதிக்காத வகையில், பெரிகாத்தான் நேஷனலில் உள்ள அதன் கூட்டணிக் கட்சிகளுடனான உறவை கட்சி தற்போது விரிவாக மறுமதிப்பீடு செய்து வருவதாக அவர் கூறினார்.

"இது, எங்களில் உள்ள ஒவ்வொரு நண்பரையும், விசுவாசமான நண்பரையும் அவமதிக்கும் ஒரு நடவடிக்கை என்று நாங்கள் கருதுகிறோம். எங்கள் அரசாங்கம் இதை ஏற்றுக்கொள்ள முடியாததற்கான காரணங்களில், அம்னோ கட்சி பின்வாங்கவில்லை, அம்னோ கட்சி பின்வாங்கவில்லை. அப்படியிருக்க, பெர்சத்து கட்சி ஏன் பின்வாங்க விரும்புகிறது? அவர்கள் பெர்லிசில் நடவடிக்கை எடுத்துள்ளனர். தேர்தல் நெருங்கி வருவதால், (உறவுகளை) அனைத்து அம்சங்களிலும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இந்தத் தேர்தலுக்கு அதன் சாதக பாதகங்கள் உண்டு. அது தேர்தலைப் பாதித்தால், பொருத்தமானதற்கேற்ப நாங்கள் செயல்படுவோம்," என்றார் அவர்.

இன்று, வெள்ளிக்கிழமை திரெங்கானு, மாராங்கில் நடைபெற்ற டுஹா சொற்பொழிவிற்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)