சிப்பாங், 23 மே (பெர்னாமா) -- 2025-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 91,456 விபத்து வழக்குகளில், 50.9 விழுக்காடு அல்லது 46,542 விபத்துகள், வேலைக்குச் சென்று வரும் வழியில் நிகழ்ந்தவை என்று பெர்கேசொ அம்பலப்படுத்தியது.
குறிப்பாக மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களிடையே, கவலையளிக்கும் போக்கையும் அந்த புள்ளிவிபரங்கள் காட்டுவதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ஸ்ரீ டாக்டர் முஹமட் அஸ்மான் அசிஸ் முஹமட் தெரிவித்தார்.
மேலும், இந்த விபத்துகளில் 51 விழுக்காடு பயண விபத்துகளால் ஏற்படுகின்றன. அதாவது, வேலைக்குச் சென்று வருபவர்கள். இந்த 51 விழுக்காடு பேரில் பெரும்பான்மையானவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள். இது 2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 21 விழுக்காடு அதிகரிப்பைக் காட்டுகிறது என்றார் அவர்.
டத்தோ ஸ்ரீ டாக்டர் முஹமட் அஸ்மான் அசிஸ் முஹமட் / பெர்கேசோ தலைமை நிர்வாக அதிகாரி
இன்று, சிப்பாங்கில், MyRider எனப்படும் மலேசிய ஒட்டுநர் பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பின்னர், டாக்டர் முஹமட் அஸ்மான் அதனைத் தெரிவித்தார்.
சாலையில் ஏற்படும் மரண விபத்துகளில் சுமார் 65 விழுக்காடு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களைச் உட்படுத்தியது என்றும் ஆண்டுதோறும் 6,000 முதல் 6,500 பேர் வரையில் உயிரிழப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)