சென்னை, 22 மே (பெர்னாமா) - தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம்-தவெக அரசின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
அதில், புதியதாக 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ள வேளையில், விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவையில் பெண்கள் நால்வர் அமைச்சர்களாக இடம் பெற்றனர்.
மேலும், இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி-வி.சி.க என இரு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.
காங்கிரஸ், இந்திய communist, Marxist communist மற்றும் வி.சி.க, ஆகிய கட்சிகளின் ஆதரவு பெற்று பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது.
வெற்றிப் பெற்றால், கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்று தவெக தலைவருமான விஜய் முன்னதாக அறிவித்திருந்தார்.
நேற்று ஆளுநர் முன்னிலையில் 23 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்ட நிலையில், அதுபோல, பெரும்பான்மை கிடைக்க ஆதரவு வழங்கிய கட்சிகளுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு விதிப்படி அதிகபட்சமாக 35 அமைச்சர்கள் வரை இடம்பெறலாம் என்பதால், இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த ஷாஜகான் மற்றும் விசிக துணைச் செயலாளர் வன்னியரசு ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுகொண்டனர்.
இதனிடையே, அமைச்சரவையில் பங்கேற்கும் விசிக-வை திமுகவினர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், தங்களின் அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உள்ளதால் இதில் யாரையும் விமர்சிக்க வேண்டாம் என அக்கழகத் தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)