Ad Banner
Ad Banner
 அரசியல்

மாநிலத் தேர்தல் குறித்து கலந்துரையாட நெகிரி செம்பிலான் நம்பிக்கைக் கூட்டணியின் மத்திய செயற்குழுக் கூட்டம்

02/06/2026 05:20 PM

சிரம்பான், 02 ஜூன் (பெர்னாமா) -- மாநிலத் தேர்தலை எதிர்கொள்வதற்கான கட்சியின் தயார்நிலைப் பணிகள் குறித்து கலந்துரையாட நெகிரி செம்பிலான் நம்பிக்கைக் கூட்டணியின் மத்திய செயற்குழுக் கூட்டம், இன்று மந்திரி புசாரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

மாநில மந்திரி புசாரும், நம்பிக்கைக் கூட்டணி தலைவருமான டத்தோ ஶ்ரீ அமினுடின் ஹருன் தலைமையிலான அக்கூட்டம், வழக்கமான கூட்டமே தவிர, சிறப்புக் கூட்டம் அல்ல நெகிரி செம்பிலான் ஜனநாயகச் செயல் கட்சி, ஜ.செ.க செயலாளர் சா கீ சின் கூறினார்.

திங்கட்கிழமை ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கூட்டத்திற்கான அழைப்பு அறிவிக்கை குறுகிய கால அவகாசத்தில் வெளியிடப்பட்டதால், இது அவசரக் கூட்டமாகக் கருதப்பட்டதாக அவர் இன்று தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.

முன்னதாக, நெகிரி செம்பிலான் நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் சிலர் இன்று காலை மந்திரி புசாரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் கூட்டம் ஒன்றை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

மாநிலத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில், ஜோகூர் மாநில சட்டமன்றம் ஜூன் 1 முதல் கலைக்கப்படும் என்று அம்மாநில மந்திரி புசார், டத்தோ ஓன் ஹபிஸ் காஸி திங்கட்கிழமை அறிவித்திருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)