Ad Banner
Ad Banner
Ad Banner
 அரசியல்

தேசிய முன்னணி மாநாடு முன்கூட்டியே நடைபெற வாய்ப்பு

02/06/2026 05:31 PM

கோலாலம்பூர், ஜூன் 02 (பெர்னாமா) -- ஜூன் 14-ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டிருந்த தேசிய முன்னணியின் மாநாடு முன்கூட்டியே நடைபெற வாய்ப்புள்ளது.

மாநிலத்தில் நிலவும் தற்போதைய அரசியல் விவகாரங்கள் குறிப்பாக, ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இம்முடிவு எடுக்கப்பட்டதாக அம்மாநில தேசிய முன்னணி செயலாளர் டத்தோ அப்துல் ஹலிம் சுலைமான் கூறினார்.  

மாநிலத் தேர்தலை எதிர்கொள்வதில் ஒற்றுமையை வலுப்படுத்தவும் அமைப்பின் பணிகளைச் செம்மைப்படுத்தவும் இந்த மாநாடு முக்கிய களமாக அமையும் என்று முன்னதாக ஜோகூர் தேமு தலைவராகவும் உள்ள மந்திரி புசார்  டத்தோ ஓன் ஹாஃபிஸ் கூறினார்.  

இதனிடையே, 16-வது மாநில தேர்தலில், அனைத்து 56 தொகுதிகளிலும் தேமு போட்டியிடும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மற்றுமொரு நிலவரத்தில் நேற்று ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து ஜூன் 22-ஆம் தேதி நடைபெறவிருந்த அதன் ஒரு நாள் சிறப்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதனை ஜோகூர் சட்டமன்றத் தலைவர் டத்தோ டாக்டர் முஹமட் புவாட் ஸர்காஷி  இன்று உறுதிபடுத்தினார்.

அச்சிறப்புக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு மே 29-ஆம் தேதி ஜோகூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் பலருக்கு அதிகாரப்பூர்வ அறிவிக்கை அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)