Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

2026 உலகக் கிண்ணப் போட்டியை ஒளிபரப்பும் அரசாங்கத்தின் முயற்சிக்கு நல்ல வரவேற்பு

20/06/2026 06:16 PM

பட்டர்வொர்த், 20 ஜூன் (பெர்னாமா) --  2026 FIFA உலகக் கிண்ணப் போட்டியை ஒளிபரப்பும் அரசாங்கத்தின் முயற்சி, உணவக உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களின் செலவுகளைக் குறைக்க உதவுவதோடு, பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

பிரெஸ்மா எனப்படும் மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கம் அதனை தமக்கு தெரிவித்ததாக, தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.

''ஒரு வியாபாரி எனக்கு இதைப் பற்றித் தெரிவித்தார். அவருக்கு தெரிந்து, இருபது ஆண்டுகளில், உலகக் கிண்ணப் போட்டி இலவசமாக ஒளிபரப்பப்படுவது இதுவே முதன்முறை. மேலும், அதை ஆர்.டி.எம், ஆர்.டி.எம் கிளிக், யுனிஃபை டி.வி போன்றவற்றில் பார்க்கலாம் என்பது நமக்குத் தெரியும். மேலும், என்னைப் பொறுத்தவரை, இது செலவுகளைக் குறைக்க உதவும்'', என்றார் அவர். 

இன்று, பினாங்கு, பொதுமக்களுடன் பிரேசில் - ஹெய்தி இடையிலான உலகக் கிண்ண காற்பந்தாட்டத்தை கண்டுகளித்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

-பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)