வகாயாமா, 04 ஜூன் (பெர்னாமா) -- அதிகாலை கரையை கடந்த ஜாங்மி புயல், ஜப்பானின் மேற்கு மற்றும் கிழக்கு பசிபிக் கடலோரப் பகுதிகளை தாக்கியதில், அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவை ஏற்படுத்தியது.
அதோடு, அங்கு பலரும் காயமடைந்தனர்.
கடந்த இரு நாட்களாக ஒகினாவா தீவுகளுக்கு அருகே கடந்து சென்ற இப்புயல், தற்போது வகாயாமாவின் தெற்குப் பகுதியில் கரையைக் கடந்தது.
ஜப்பானின் வானிலை ஆய்வு மையம், வகாயாமாவில் உள்ள கோசா ஆற்றுக்கு, வெள்ள அபாயம் குறித்த நிலை 5-ஆம் கட்ட உயர் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
நேற்றைய நிலவரப்படி, ஐச்சி மற்றும் நாரா பகுதிகளில் 23 பேர் காயமடைந்த வேளையில், அதில் 17 பேர் ஒகினாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த ஆண்டின் ஆறாவது புயலான ஜாங்மி, பொதுப் போக்குவரத்தையும் பாதித்துள்ளது.
இதன் காரணமாக, விமான நிலையத்தில் உள்ள அனைத்து உள்நாட்டு விமான சேவைகளோடு சில அனைத்துலக விமான சேவையையும் ரத்து செய்தது.
-பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)