பண்டார் பாரு செந்தூல், 19 ஜூன் (பெர்னாமா) -- அனைத்து ஊராட்சி மன்றங்களும் குறிப்பாக புத்ராஜெயா போன்ற சுற்றுலா மையங்களில் ஒரு பிரச்சனை சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படும் வரை காத்திருக்காமல், பொது வசதிகளின் தூய்மையையும் பாதுகாப்பையும் சீராகப் பராமரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றன.
அடிப்படைப் பராமரிப்பு அல்லது 'சுகாதாரப் பாதுகாப்பு' அம்சங்கள் தொடரப்பட வேண்டும் என்றும், அவற்றைப் புறக்கணிக்க எந்தக் காரணமும் இல்லை என்றும் கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா யோ கூறினார்.
''சாப்பிடும் விஷயத்தில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு என்பதே மிக முக்கியமான அம்சம். இதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்'', என்றார் அவர்.
சில பெரிய மேம்பாட்டுத் திட்டங்களுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு தேவைப்பட்டாலும், சுகாதாரம் மற்றும் பாதுகாப்புப் பிரச்சனைகளுக்கு முதலில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று ஹன்னா தெரிவித்தார்.
ஆகவே, எதிர்காலத்தில் அனைத்து ஊராட்சி மன்றங்களும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புப் பிரச்சனைகளைப் புறக்கணிக்க எந்தக் காரணமும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)