புத்ராஜெயா, 08 ஜூன் (பெர்னாமா) -- நாடு முழுவதிலும் உள்ள தேசிய தகவல் பரப்பு மையமான NADI-யில் Prompt Engineer எனப்படும் செயற்கை நுண்ணறிவு கட்டளைப் பொறியாளர்களை தொடர்பு அமைச்சு உருவாக்கும்.
செயற்கை நுண்ணறிவை உகந்த முறையில் பயன்படுத்தி உள்ளூர் மக்களுக்கு பயனளிக்கக்கூடிய இளம் தலைமுறையினர், அந்த பொறுப்பேற்பார்கள் என்று தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
உருவாக்கப்படும் கட்டளைப் பொறியாளர்கள், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் திறனைக் கொண்டிருப்பது மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகமும் பயனடையக்கூடிய புதிய செயலிகளை உருவாக்கும் ஆற்றலையும் பெற்றிருப்பார்கள் என்றும் டத்தோ ஃபஹ்மி கூறினார்.
''பங்கி தீவு, ஃபெல்டா சுஹார்தோ ஆகிய பகுதிகளில் புதிய செயலிகள் மேம்படுத்தப்படுவதை கற்பனை செய்து பாருங்கள். இந்த நாடிகள் எங்கிருந்தாலும், அவர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை வழங்க முடியும்'', என்றார் அவர்.
வேலை வாய்ப்புகளைத் தேடி இளம் தலைமுறையினர், பெரிய நகரங்களுக்கு புலம்பெயரும் தேவையைக் குறைப்பதையும் இந்த முயற்சி நோக்கமாக கொண்டுள்ளது.
இன்று, புத்ராஜெயாவில் தொடர்பு அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்தில் உரையாற்றியபோது அதனைத் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)