Ad Banner
Ad Banner
 பொது

லெபனானில் அதிகரிக்கும் சவாலான பாதுகாப்புச் சூழல்; எச்சரிக்கையுடன் இருக்க மல்பாட் 850-13 படைக்கு உத்தரவு

13/06/2026 06:38 PM

கோத்தா திங்கி, 13 ஜூன் (பெர்னாமா) -- லெபனானில் அதிகரித்து வரும் சவாலான பாதுகாப்புச் சூழலைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்து எச்சரிக்கையுடன் இருக்கும்படி மலேசிய பட்டாலியன், மல்பாட் 850-13 படை உறுப்பினர்களுக்கு தற்காப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

மோதல் நடக்கும் பகுதிகளில் தற்போது பணியில் இருக்கும் நாட்டின் வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இந்த உத்தரவு அவசியமானது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் தெரிவித்தார்.

எந்த நேரத்திலும் ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களளைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட குழுக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அமைச்சு நினைவூட்டுவதாக அவர் கூறினார்.

''ஆம், அது எங்களுக்குத் தெரியும். மேலும், நாங்கள் ஐக்கிய நாடுகள் அமைதிப்படையின் கீழ் செயல்படுகிறோம் என்பதும் எங்களுக்குத் தெரியும். இதுபோன்ற அச்சுறுத்தல்களும் சவால்களும் ஏற்படக்கூடும் என்பதை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை நாங்கள் ஏற்கனவே வழங்கியுள்ளோம். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம்,'' என்றார் அவர்.

வியாழக்கிழமை தெற்கு லெபனானின் ஹரிஸ் அருகே நடந்த வான்வழித் தாக்குதல் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த காலிட், இரண்டு மலேசிய வீரர்கள் சிராய்ப்பு காயங்களுடன் தப்பியதை உறுதிப்படுத்தினார்.

இன்று, கோத்த திங்கியில் உள்ள ஜோகூர் கம்போங் தேசியப் பள்ளியில் தற்காப்பு அமைச்சின் 'Jiwa Murni MADANI' திட்டத்தைத் தொடங்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)