Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

பராகுவேவை வீழ்த்திய அமெரிக்கா; ஆச்சரியத்தில் ரசிகர்கள்

13/06/2026 07:50 PM

லாஸ் ஏஞ்சலஸ், 13 ஜூன் (பெர்னாமா) -- 2026 உலகக் கிண்ணம்...இன்று காலை நடைபெற்ற D பிரிவின் முதல் ஆட்டத்தில் அமெரிக்கா 4-1 என்ற கோல் கணக்கில் பராகுவே அணியை வீழ்த்தி அமெரிக்கா ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்த வெற்றியின் வழி, உபசரணை நாடாக அமெரிக்க சொந்த மண்ணில் நடைபெறும் போட்டியை சிறப்பாகத் தொடங்கியது.

அமெரிக்கா 32 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கிண்ண போட்டியில் களமிறங்கியது.

அதிலும், 1930-ஆம் ஆண்டில் பெற்ற வெற்றிக்குப் பிறகு, இது அமெரிக்காவின் மிகப் பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

சுமார், 70 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் லாஸ் ஏஞ்சலஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில், அமெரிக்கா வெறும் 7 நிமிடங்களிலேயே 1-0 என முன்னிலை பெற்றது.

பராகுவே ஆட்டக்காரர் செய்த தவறால் சொந்த கோல் பதிவாகி, அமெரிக்கா ஆரம்பத்திலேயே ஆட்டத்தில் ஆதிக்கத்தைச் செலுத்தியது.

தொடர்ந்து, 31வது நிமிடத்தில், அமெரிக்கா மேலும் ஒரு கோல் அடிக்க முதல் பாதி ஆட்டம் 2-0 என்ற நிலையில் முடிந்தது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் பராகுவே கடும் போட்டியை வழங்கியதில் 72-வது நிமிடம் அதன் ஒரே கோல் போடப்பட்டது.

ஆயினும், மேலும் இரு கோல்கள் அடித்து அமெரிக்கா அணி 4-1 என்ற கோல் கணக்கில் எளிதாக வெற்றி 3 புள்ளிகளைப் பெற்றது.

 

-- பெர்னமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)