Ad Banner
Ad Banner
 உலகம்

பிலிப்பைன்சில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்; 32 பேர் பலி

08/06/2026 06:16 PM

மின்டானோ, 08 ஜூன் (பெர்னாமா) -- இன்று காலை, தெற்கு பிலிப்பைன்சின் மின்டானோ தீவில் ஏற்பட்ட ரிக்டர் அளவைக் கருவியில் 7.8ஆகப் பதிவான நிலநடுக்கத்தில், குறைந்தது 32 பேர் பலியாகினர்.

எனினும், அந்த எண்ணிக்கை இன்னும் சரிபார்க்கப்பட்டு வருகிறது.

அந்த நிலநடுக்கத்தில், அப்பகுதி முழுவதுமுள்ள கட்டமைப்புகள் சேதமடைந்தன.

நிலநடுக்கத்தினால், மட்டானோ தேசிய உயர்நிலை பள்ளியின் கட்டிடம் உட்பட சந்தோஸ் நகரில் செயல்பட்டு வந்த ஜோலிபீ துரித உணவு கட்டிடமும் இடிந்த விழும் காணொளிகள் சமூக ஊடகத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

சேதத்தின் அளவை மதிப்பிடுவதற்காக சம்பந்தப்பட்ட இடங்களுக்குள் மீட்பு குழுவினர் நுழைந்ததோடு, அவ்விடத்தைச் சுற்றி தடுப்புகளை அமைத்தனர்.

இதனிடையே, அப்பகுதியில் நில அதிர்வுகள் இன்னும் உணரப்பட்டு வருவதாகவும், சேதங்கள் மற்றும் காயங்கள் குறித்த அறிக்கைகளை அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருவதாகவும், சந்தோஸ் பேரிடர் அலுவலகம் தெரிவித்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)