Ad Banner
Ad Banner
 பொது

மீண்டும் எதிர்க்கட்சித் தலைவரானார் ஹம்சா

22/06/2026 04:43 PM

கோலாலம்பூர், ஜூன் 22 (பெர்னாமா) -- லாருட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ ஹம்சா சைனுடின் மீண்டும் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதை, மக்களவைத் தலைவர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் உறுதிபடுத்தினார்.

மக்களவையின் முதல் கூட்டத்திற்குப் பின்னர் ஏற்பட்ட முன்னேற்றங்கள் மற்றும் பரிசீலிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், மே 20-ஆம் தேதி வரை ஹம்சா எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார் என்றும் ஜொஹாரி கூறினார்.

அதன் பின்னர், அதாவது மே 21-ஆம் தேதியிலிருந்து ஜூன் பத்தாம் தேதி வரை கெமாமான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் ஷம்சூரி மொக்தார் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில், ஜூன் 18-ஆம் தேதி ஹம்சா மீண்டும் அப்பொறுப்பை ஏற்றதாக ஜொஹாரி கூறினார்.

"அக்காலக்கட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக ஆற்றிய சேவைக்காக மாண்புமிகு கெமாமான் அவர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், மாண்புமிகு லாரூட் அவர்கள் மீண்டும் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்பதை வரவேற்கிறேன்,'' என்றார் அவர்.

மக்களவை நடைமுறை விதிமுறைகளின் நிலையான ஆணை 4A(3)-இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவரின் நியமனம் குறித்து ஜொஹாரி அவ்வாறு தெரிவித்தார்.

- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)