கோலாலம்பூர், ஜூன் 22 (பெர்னாமா) -- ஹோர்முஸ் நீரிணையில் ஏற்படும் வர்த்தக இடையூறுகளின் தாக்கத்தை மலேசியா, இன்னும் சமாளிக்கக்கூடிய நிலையில் உள்ளது.
விநியோகச் சங்கிலி சீரமைப்பு, கூடுதல் செலவுகளை நிறுவனங்களே ஏற்பது, மற்றும் அச்செலவுகள் உள்நாட்டு விலைகளுக்கு நேரடியாக மாற்றப்படுவதை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கை போன்ற நடவடிக்கைகள் அதற்கு உதவுவதாக பொருளாதார அமைச்சர் அக்மால் நஸ்ருல்லா முஹமட் நசிர் தெரிவித்தார்.
திறந்த பொருளாதார அமைப்பைக் கொண்ட நாடாக மலேசியா, இந்த இடையூறுகளின் தாக்கத்திலிருந்து முற்றிலும் விலகி இருக்க முடியாது.
அரசாங்கத்தின் முன்கூட்டிய தலையீட்டு நடவடிக்கைகள் மூலம் இந்நிலைமை தொடர்ந்து அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வருவதாக, அக்மால் நஸ்ருல்லா விளக்கினார்.
"அரசாங்கம் நான்கு முக்கியப் பிரச்சனைகளின் அடிப்படையில் தலையீட்டு நடவடிக்கைகளைத் திரட்டியுள்ளது, அவற்றில் முதலாவது மக்களின் பாதுகாப்பு ஆகும். இரண்டாவதாக, நாம் நிச்சயமாக விநியோகத்தையும் விலைகளையும் நிலைப்படுத்த வேண்டும், இதற்கு அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தையும் விலைகளையும் தினசரி கண்காணிப்பது அவசியமாகும்,'' என்றார் அவர்.
மக்களைப் பாதுகாக்க, நிலையான அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தை உறுதி செய்ய, தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்க, மற்றும் நாட்டின் பொருளாதார மீள்திறனை வலுப்படுத்த அரசாங்கம் உறுதியுடன் உள்ளதாக, இன்று மக்களவையில் அக்மால் நஸ்ருல்லா குறிப்பிட்டார்
- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)