புத்ராஜெயா, 08 ஜூன் (பெர்னாமா) -- தற்கொலை எண்ணம் தொடர்பான செயல் குறித்த பாதுகாப்பான ஊடகச் செய்தி பற்றிய வட்டமேசை கலந்துரையாடலின் முடிவுகள், அண்மையில் ஓர் அமைச்சரவைக் குறிப்பின் மூலம் அரசாங்கத்தின் உயர்மட்டத்திற்குக் கொண்டு செல்லப்படும்.
மனநலப் பிரச்சினைகளைக் கையாள்வது மற்றும் அது குறித்துப் புகாரளிப்பது தொடர்பான பணிகளை அமைச்சுக்கள் முழுவதும் முழுமையாக ஒருங்கிணைப்பதை இது உறுதி செய்வதாக தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
''முன்னதாக நாங்கள் எடுத்த முடிவுகளில் ஒன்று, நமது இரண்டு அமைச்சுகளின் கீழ் மட்டுமல்லாமல், பிற அமைச்சுகளிலும் உள்ள பல விஷயங்கள் தொடர்பான இந்த வட்டமேசை கலந்துரையாடல் முடிவுகளை, அமைச்சரவைக்குத் தெரிவிப்பதற்காக ஒரு குறிப்பைக் கொண்டு வருவதாகும். மேலும், அக்டோபர் மாதத்தில் மனநல விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, செல்வாக்கு மிக்கவர்கள் அல்லது முக்கியக் கருத்துத் தலைவர்களின் சமூக ஊடகத் தளங்களுடன் இணைந்து செயல்படுவது பொருத்தமானது என்று நாங்கள் கருதுகிறோம்,'' என்றார் அவர்.
இன்று, புத்ராஜெயாவில் தலைமை செய்தி ஆசிரியர்கள், தொழில்துறை அமைப்புகள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் ஒரு வட்டமேசை கலந்துரையாடலுக்கு ஃபஹ்மி தலைமை தாங்கினார்.
இந்த ஒருங்கிணைப்பு, முன்னிலைப் பணியாளர்கள் அல்லது முதல் பதிலளிப்பாளர்களுக்கான நிலையான செயல்பாட்டு தர விதிமுறைகளையும் சீர்படுத்தும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)