Ad Banner
Ad Banner
 பொது

தனியார் சிகிச்சையகங்களின் செயல்பாடுகள் சந்தையில் நீடிப்பதை உறுதிசெய்ய சுகாதார அமைச்சு உறுதி

23/06/2026 06:12 PM

கோலாலம்பூர், 23 ஜுன் (பெர்னாமா) -- தனியார் சிகிச்சையகங்களின் செயல்பாடுகள் சந்தையில் போட்டித்தன்மையுடன் நீடிப்பதை உறுதிசெய்ய, சுகாதார அமைச்சு புற ஒப்பந்த சேவையைப் பயன்படுத்தி அவற்றின் செயல்பாடுகள் தொடர்வதில் உறுதியாக உள்ளது.

ஆரோக்கியமான சுகாதாரப் பாதுகாப்புச் சூழலை உருவாக்குவதற்கும், தனியார் மருத்துவர்களின் நலனைப் பாதுகாப்பதற்கும் இத்தலையீட்டு நடவடிக்கைகள் முக்கியமானவை என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்ளி அஹ்மாட் கூறினார்.

''இது எனக்கு நன்கு தெரியும். கடந்த காலங்களில், குறிப்பாக கொவிட்-19 காலகட்டத்தில், தனியார் பொது மருத்துவ சிகிச்சையகங்கள் (ஜி.பி) மூடப்பட்டதை நான் தனிப்பட்ட முறையில் கையாண்டுள்ளேன். அவை இடைவெளிகளை நிரப்புவதால், நிலைத்திருப்பது மட்டுமல்லாமல், செழித்து வளர்ந்து, சேவை நடவடிக்கைகள் தொடரவும் நாங்கள் உறுதிசெய்ய விரும்புகிறோம்,'' என்றார் அவர். 

பயிற்சி மருத்துவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் பிரச்சனையால் தனியார் ஆரம்ப சுகாதாரத் தொழில்துறை தற்போது அழுத்தத்தில் இருப்பது மற்றும்
2013 முதல் 2,034 தனியார் மருத்துவ சிகிச்சையகங்கள் மூடப்பட்டுள்ளது தொடர்பில், காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் Dr Halimah Ali எழுப்பிய கூடுதல் கேள்விக்கு டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்ளி அவ்வாறு பதிலளித்தார்.

மேலும், நடப்பிலுள்ள சட்டத்தின் கீழ் தனியார் மருத்துவர்களுக்கான சேவைக் கட்டணத்தின் குறைந்தபட்ச விலையை முன்பு இருந்த 10 ரிங்கிட்டிலிருந்து 80 ஆக உயர்த்தி, அரசாங்கம் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)