பாங்கி, 23 ஜூன் (பெர்னாமா) -- மலேசியா-துர்மெனிஸ்தான் இடையிலான இருதரப்பு உறவுகள் வலுப்பெற்றதைத் தொடர்ந்து, மூலப்பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை வர்த்தகர்கள் காண்கின்றனர்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ பயணம், அரசதந்திர உறவுகளை வலுப்படுத்துவது மட்டுமின்றி, இருதரப்பு ஒத்துழைப்பிற்கான உந்துசக்தியாக இருக்கும் திறனையும் கொண்டுள்ளதாக டேசாதேரா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, டத்தோ பெய்சால் நோர் நூர்பி தெரிவித்தார்.
''பிரதமர் துர்க்மெனிஸ்தானுக்குச் சென்றது. அதுவும்தான். அங்கு ஒரு பெரிய முஸ்லிம் மக்கள் தொகை உள்ளது என்பதும் நமக்குத் தெரியும். நான் தவறாக நினைக்கவில்லை. துர்க்மெனிஸ்தானின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 75 விழுக்காட்டினர் முஸ்லிம்கள். சரி. என்னைப் பொறுத்தவரை, இது தானாகவே வாய்ப்புகளைத் திறக்கிறது. உலகளவில் சந்தைப்படுத்தக்கூடிய பல தயாரிப்புகள் எங்களிடம் உள்ளன. எனவே, என்னைப் பொறுத்தவரை, இது ஒரு வாய்ப்பு,'' என்றார் அவர்.
இன்று, பாங்கியில், 'Dapur Brahim's' எனும் நிகழ்ச்சியை தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெய்சால் அதனைக் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)