Ad Banner
Ad Banner
 பொது

இனி பெர்சத்துவுடன் அரசியல் ஒத்துழைப்பு இல்லை - பாஸ்

09/06/2026 01:03 PM

கோலாலம்பூர், 09 ஜூன் (பெர்னாமா) --  பெர்சத்து கட்சியுடனான அரசியல் ஒத்துழைப்பை முறித்துக்கொள்வதாக பாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

திங்கட்கிழமை இரவு நடைபெற்ற மத்திய செயற்குழு சிறப்புக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக பாஸ் தலைவர் டான் ஶ்ரீ அப்துல் ஹடி அவாங் தெரிவித்தார்.

இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவு குறித்த அறிக்கைகள், ஆய்வுகள் மற்றும் தற்போதைய மதிப்பீடுகளை அடிப்படையாக கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டதாக டான் ஶ்ரீ அப்துல் ஹடி அவாங் குறிப்பிட்டார்.

இஸ்லாமியர்களை ஒன்றிணைக்கும் கொள்கையின் அடிப்படையில் கொள்கை, சட்டம் மற்றும் பாஸ் கட்சியின் அரசியல் ஒத்துழைப்பின் நன்மைகள் குறித்து பரிசீலக்கப்பட்ட நிலையில்,

கடந்த ஜூன் இரண்டாம் தேதி நடைபெற்ற கட்சியின் உச்சமன்ற கூட்டத்தின் முடிவை அங்கீகரிப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

பெர்சத்து கட்சிக்குள் நிலவும் நெருக்கடி மற்றும் உட்பூசல்கள் பெரிக்காத்தான் நேஷனலைப் பாதிக்கும் வகையில் இருப்பதை தமது கட்சி தீவிரமாகக் கவனித்து வருவதாக பாஸ் கட்சியின் பாசிர் பூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் நிக் முஹமட் சவாவி சலே முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)