Ad Banner
Ad Banner
 உலகம்

ஒப்பந்தத்தை பின்பற்றத் தவறினால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படலாம்; டிரம்ப் எச்சரிக்கை

23/06/2026 07:38 PM

அமெரிக்கா, 23 ஜூன் (பெர்னாமா) -- அமெரிக்காவுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை ஈரான் கடைப்பிடிக்கத் தவறினால், அவசியமெனக் கருதும் எந்தவொரு நடவடிக்கையையும் தாம் எடுக்கவிருப்பதாக, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

''ஈரான் தங்களின் ஒப்பந்தத்தை நிறைவேற்றத் தவறினாலோ அல்லது ஒழுங்காக நடந்துகொள்ளாவிட்டாலோ, நான் செய்ய வேண்டியதைச் செய்வேன்,'' என்றார் அவர்.

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்தியத் தாக்குதல்களுக்கு மூன்று மாதங்களுக்குப் பின்னர்,

கடந்த வாரம் டிரம்பும் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனும் இரு நாடுகளுக்கு இடையிலான ஓர் இடைக்கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதனிடையே, சுமார் இருபது லட்சம் பீப்பாய் எண்ணெயை ஏற்றிச் சென்ற இரண்டு கச்சா எண்ணெய் கப்பல்கள், திங்கள்கிழமை ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் பயணத்திற்கான பாதுகாப்பு குறித்த கவலைகளைத் தொடர்ந்து, இந்த முக்கியத்துவம் வாய்ந்த வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து மீட்சி அடைந்துள்ளது.

உலகின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி வழித்தடங்களைப் பாதிக்கக்கூடிய மேற்கு ஆசிய வட்டாரத்தில் உருவாகி வரும் பதற்றங்களை உலகளாவிய எரிசக்தி சந்தைகள் தொடர்ந்து கண்காணித்து வரும் வேளையில், தற்போது அந்த நீரிணையில் கப்பல் போக்குவரத்து அதிகரித்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)