Ad Banner
Ad Banner
 பொது

7 லட்சத்திற்கும் அதிகமான ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன

09/06/2026 01:07 PM

கோலா நெருஸ், 09 ஜூன் (பெர்னாமா) --  அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாப்பதில் நாட்டின் கடல்சார் பாதுகாப்பு முயற்சிகளைப் பிரதிபலிக்கும் வகையில் கடந்தாண்டு முழுவதும் திரெங்கானுவில் ஏழு லட்சத்து 57 ஆயிரத்து 869 ஆமைக் குஞ்சுகள் மீண்டும் கடலில் விடப்பட்டன.

திரெங்கானு ஆமை பாதுகாப்பு மற்றும் நிர்வகிப்பு திட்டத்தின் மூலம் இது சாத்தியமானதாக, மீன்வளத் துறை தலைமை இயக்குநர் டத்தோ அட்னான் உசேன் தெரிவித்தார்.

2025-ஆம் ஆண்டில் 13,180 ஆமைக் கூடுகளிலிருந்து பத்து லட்சத்து 70,000 முட்டைகள் சேகரிக்கப்பட்டு அடைகாக்கப்பட்டதும் இத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்டதாக டத்தோ அட்னான் கூறினார்.

ஆமை முட்டைகளின் குஞ்சு பொரிப்பு விகிதமும் 71.07 விழுக்காடு உயர்ந்து, குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்தது.

பூலாவ் ரெடாங்கில் உள்ள சாகார் ஹுத்தாங் மற்றும் பாசிர் பஞ்சாங் கடற்கரைகள், டுங்குனில் உள்ள ரந்தாவ் அபாங் கடற்கரை, கெமாமானில் உள்ள பந்தாய் கெலிகா மற்றும் பந்தாய் மா கடற்கரைகள் உள்ளிட்ட பல குறிப்பிடத்தக்க கடற்கரைகளுடன் நாட்டில் ஆமைகளுக்கான முக்கிய இனப் பெருக்கம் இடமாக திரெங்கானு உள்ளது.

இந்த ஆமை பாதுகாப்பு முயற்சிகள் சூழலியல் சுற்றுலாத் துறைக்கும் பயன் அளித்துள்ளதாக அட்னான் கூறினார்.

2025-ஆம் ஆண்டில் திரெங்கானுவில் உள்ள ஆமைப் பாதுகாப்பு மையங்கள் மொத்தம் இரண்டு லட்சத்து 19,095 பார்வையாளர்களைப் பதிவு செய்தன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)