Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

தாக்குதலை நிறுத்திய இஸ்ரேல் - ஈரான்

09/06/2026 01:09 PM

தெஹ்ரான், 09 ஜூன் (பெர்னாமா) -- ஈரானும் இஸ்ரேலும் தங்களது இராணுவ நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக இன்று அறிவித்துள்ளன.

ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் இரு நாடுகளுக்கு இடையிலான மோதல்கள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட அண்மைய இராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக, ஈரான் வடக்கு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவியது.

அதனை தொடர்ந்து இவ்விரு நாடுகளும் தாக்குதல்களை அதிகரித்தன.

இந்நிலையில் இவ்விரு நாடுகளும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்திருக்கின்றன.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் வேண்டுகோளுக்கு இணங்கவும் இம்முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இருப்பினும், தென் லெபனான் உட்பட, ஈரானின் எந்வொரு பகுதி மீதும் மீண்டும் தாக்குதல் தொடுக்கப்பட்டால், மிக கடுமையான பதில் தாக்குதல் மேற்கொள்ளப்படும் என ஈரான் எச்சரித்திருக்கிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)