Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

வடகொரியத் தலைவருக்கு வற்றாத ஆதரவு - சீனா

09/06/2026 01:15 PM

பியோங்யாங், 09 ஜூன் (பெர்னாமா) -- இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த, வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும், சீன அதிபர் ஸி ஜிங்பிங்கும் இணக்கம் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும், கிம் ஜோங் உன்னுக்கு தாம் வற்றாத ஆதரவை தொடர்ந்து வழங்கவிருப்பதாக ஸி ஜின்பிங் கூறியிருக்கிறார்.

இரு நாள்கள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு, ஸி ஜின்பிங் நேற்று வட கொரியா சென்றுள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியால் வழி நடத்தப்படும் சீனாவின் தலைவர் வட கொரியாவுக்கு சென்றிருப்பது உலக நாடுகளின் பார்வையை ஈர்த்துள்ளது.

பியோங்யாங் சென்றடைந்த அவருக்கு, அந்நாட்டின் உயரிய வரவேற்பு வழங்கப்பட்டது.

அதன் பின்னர் பியோங்யாங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஸி ஜின்பிங், உச்சநிலை மாநாட்டிலும் கலந்து கொண்டார்.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக வட கொரியாவுக்குப் பயணம் மேற்கொண்ட ஸி ஜின்பிங், இருதரப்பு உறவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காண்பதற்கான ஒரு வாய்ப்பாகத் தமது பயணத்தைப் பயன்படுத்திக்கொள்வதாக தெரிவித்திருக்கிறார்.

கடந்த செப்டம்பர் மாதம் ரஷ்யாவில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் ஸி ஜிங்பிங்கும் கிம்மும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)