சரங்கானி, 09 ஜூன் (பெர்னாமா) -- நேற்று தெற்கு பிலிப்பைன்சில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37-ஆக உயர்ந்துள்ளது.
மேலும், பல குடியிருப்பு பகுதிகளும் கட்டிடங்களும் கடுமையாக சேதமுற்றன.
சரங்கானியில் ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவை கருவியில் 7.8-ஆக பதிவு செய்யப்பட்டது.
இதனால் அண்டை நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் மீட்டுக்கொள்ளப்பட்டது.
200க்கும் அதிகமானோர் காயமுற்ற நிலையில், மேலும் பலரை காணவில்லை என்று போலீஸ் தெரிவித்திருக்கிறது.
தேடல் மற்றும் மீட்புப் பணிகள் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கின்றன.
கடுமையான சேதம் காரணமாகப் பல இடங்களில் மின்சார துண்டிப்பும் ஏற்பட்டுள்ளது.
ஜெனரல் சாண்டோஸ் நகரில் இரண்டு மாடிகளைக் கொண்ட பள்ளிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில், அதன் உள்ளே மாணவர்கள் சிக்கியிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)