கோலாலம்பூர், 08 ஜூன் (பெர்னாமா) -- 2027-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் முன்னேற்பாடாக, அனைத்து அமைச்சுகளும் தங்களின் மேம்பாட்டுத் திட்ட பரிந்துரைகளைச் சமர்ப்பித்துள்ளன.
அந்த மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்த மேலும் விரிவான ஆய்வு, அடுத்த மாதம் தொடங்கும் என்று பொருளாதார அமைச்சர், அக்மல் நஸ்ருல்லா முஹமட் நாசிர் தெரிவித்தார்.
''பொருளாதார அமைச்சு மட்டத்தில், நாங்கள் மேம்பாட்டு கோணத்தில் கவனம் செலுத்துகிறோம். எனவே மேம்பாட்டிற்காக, ஈடுபாட்டுச் செயல்முறை முடிந்தவரை சிறப்பாகச் செயல்படுத்தப்பட வேண்டும். இன்றுவரை, அனைத்து அமைச்சுகளும் 2027-ஆம் ஆண்டுக்கான தங்களின் மேம்பாட்டுத் திட்ட பரிந்துரைகளைச் சமர்ப்பித்துள்ளன,'' என்றார் அவர்.
இருப்பினும், உலகளாவிய எரிசக்தி விநியோக நெருக்கடியின் காரணமாக 2027-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில், அரசாங்கம் ஒரு கடினமான சூழலை எதிர்கொள்ளக்கூடும் என்ற சாத்தியக்கூற்றையும் அக்மல் நஸ்ருல்லா நிராகரிக்கவில்லை.
இன்று, கோலாலம்பூரில், 2026 இன்வெஸ்ட் மலேசியாவை முன்னிட்டு அமைச்சருடனான கலந்துரையாடலுக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதனைக் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)