Ad Banner
Ad Banner
 பொது

எஸ்.பி.ஆர்.எம் முன்னாள் தலைமை ஆணையர் மீது அல்பர்ட் தேய் அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்

09/06/2026 05:00 PM

கோலாலம்பூர், 09 ஜூன் (பெர்னாமா) --  தொழிலதிபர் அல்பர்ட் தேய் தன்னைப் பற்றி வெளியிட்டதாகக் கூறப்படும் பொய்யான மற்றும் அவதூறான கருத்துகளுக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் முன்னாள் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்.

வழக்குத் தொடுக்கும் சம்மனும் கோரிக்கை அறிக்கையும், நேற்று ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக சைன் மெகாட் மற்றும் முராட் சட்ட நிறுவனம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அல்பர்ட் தேய்க்கு எதிராக அசாம் பாக்கி இழப்பீடும் நிரந்தரத் தடை உத்தரவும் கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் தற்போது நீதிமன்றத்தின் பரிசீலனையில் இருப்பதால் வழக்கின் சாராம்சம் குறித்து அசாம் பாக்கி அல்லது அச்சட்ட நிறுவனம் எந்தவொரு கருத்துகளையும் தெரிவிக்காது.

ஆகவே, நீதித்துறை நடைமுறைக்கு அனைத்து தரப்பினரும் மதிப்பளிக்க வேண்டும் என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)