மியாமி, 22 ஜூன் (பெர்னாமா) - 2026 உலகக் கிண்ண காற்பந்து போட்டியின் H பிரிவு ஆட்டங்களில் ஸ்பெயின், சவூதி அரேபியா, உருகுவே மற்றும் கேப் வேர்ட் (Cape Verde) அணிகள் களம் கண்டன.
அதில், உருகுவே அணியுடன் 2-2 என்ற கோல்களில் சமன் கண்டதை அடுத்து, உலக கிண்ண போட்டியில், பங்கேற்க கேப் வேர்ட் தகுதியான அணி என்பதை, மீண்டும் நிரூபித்துள்ளது.
இன்று அதிகாலை மியாமி அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில், இரு கோல்கள் அடித்த உருவேக்கு எதிராக கேப் வேர்ட்-டும் சமநிலை கோலைப் போட்டது.
இதுவரை உலகக் கிண்ண போட்டியில், இரண்டு முறை வெற்றி பெற்றுள்ள உருகுவே அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுமா என்பது இந்த முடிவின் வழி சந்தேகமாகியுள்ளது.
இதனிடையே, இதே பிரிவில் சவூதி அரேபியாவை எதிர்த்து விளையாடிய ஸ்பெயின் 4-0 எனும் கோல் எண்ணிக்கையில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.
கேப் வேர்ட் உடன் சமன் கண்ட ஸ்பெயின், இவ்வெற்றியின் வழி தனது ரசிகர்களுக்கு புது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
G பிரிவு ஆட்டங்களில், எகிப்து 3-1 எனும் கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
உலகக் கிண்ண வரலாற்றில் இதுவே எகிப்தின் முதல் வெற்றியாகும்.
முதல் பாதி முடியும்வரை நியூசிலாந்து முன்னிலை வகித்தாலும் பிற்பாதியில் தோல்வியைத் தழுவியது.
நிறைவாக, பெல்ஜியமும் - ஈரானும் சந்தித்த ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்திருக்கின்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)