Ad Banner
Ad Banner
 பொது

ஏ.ஐ-இன் வளர்ச்சி சமூகத்தைப் பற்றிய ஆழமான புரிதலின் அடிப்படையில் அமைய வேண்டும் - பிரதமர்

09/06/2026 05:08 PM

தோக்கியோ, 09 ஜூன் (பெர்னாமா) --  தொழில்நுட்ப முன்னேற்றம் அனைவரையும் உள்ளடக்கியதாகவும், நீடித்ததாகவும் இருப்பதை உறுதிசெய்ய செயற்கை நுண்ணறிவு, ஏ.ஐ-இன் வளர்ச்சி நெறிமுறைகள், மனிதநேயம் மற்றும் சமூகத்தைப் பற்றிய ஆழமான புரிதல் ஆகியவற்றின் அடிப்படையில் அமைய வேண்டும்.

செயற்கை நுண்ணறிவை ஒரு சிறப்புத் துறையாக மட்டும் பார்க்காமல், அது பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் அனைத்துத் துறைகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பல்துறை அம்சமாகக் கருதப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

''கல்வியின் உண்மையான மதிப்பை மிகைப்படுத்தி கூற முடியாது. அது நற்பண்புகளை உருவாக்குகிறது. அதனுடன் சேர்ந்த அறிவையும் ஞானத்தையும் புகட்டுகிறது. இது இளைஞர்களிடமும், நிச்சயமாக நம் அனைவரிடமும் எளிதில் எதிரொலிக்கும் ஒரு உலகளாவிய மதிப்பு என்று நான் உறுதியாக நம்புகிறேன்'', என்றார் அவர்.

இன்று, தோக்கியோ பல்கலைக்கழகத்தில் 'மனித-இயந்திர நாகரிகத்தில் மனிதநேயம்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றியபோது, ​​பிரதமர் அவ்வாறு கூறினார்.

உண்மையான வளர்ச்சித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் செயற்கை நுண்ணறிவு செயல்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)