Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

உள்ளூர் இசையை மேம்படுத்துவது குறித்து மின்ட்ரா பிரதிநிதிகளை டத்தோ ஃபஹ்மி சந்தித்தார்

09/06/2026 07:04 PM

கோலாலம்பூர், 09 ஜூன் (பெர்னாமா) -- உள்ளூர் இசையை மேம்படுத்துவது, குறிப்பாக வானொலி நிலையங்களில் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டிய அம்சங்கள் மற்றும் ஆதரவு குறித்து விவாதிப்பதற்காக, மலேசிய இந்திய ஒலிப்பதிவு கலைஞர் சங்கம், MINDRAA பிரதிநிதிகளை தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் இன்று அங்காசபூரியில் சந்தித்தார்.

இச்சந்திப்பின்போது, தமிழ், சீனம் மற்றும் ஆங்கிலப் பாடல்களை ஒலிபரப்பும் நிலையங்கள் உட்பட, வெளிநாட்டுப் பாடல்களைக் காட்டிலும் உள்ளூர் பாடல்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைப்பதற்கு உதவும் வழிமுறைகளை இன்னும் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

பல திறமையான உள்ளூர் கலைஞர்கள், தரமான படைப்புகள் மற்றும் பல்வேறு வகையான ஆதரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில், கலைஞர்களுக்கான மானியங்களும் அடங்கும் என்று ஃபஹ்மி கூறினார்.

உள்ளூர் கலைஞர்களின் படைப்புகள், வெளியீடுகள், விளம்பரங்கள் மற்றும் தொடர் ஆதரவுடன் அத்துறை இயங்கினால் மட்டுமே உள்ளூர் இசைத் துறை தொடர்ந்து வளரும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)