Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

'இயக்குநர் இமயம்' பாரதிராஜா காலமானார்

10/06/2026 08:07 PM

சென்னை, ஜூன் 10 (பெர்னாமா) -- தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

அவருக்கு வயது 85.

சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அவர், இன்று காலை மறைந்தார்.

1977 ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தமது முதல் படத்திலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி போன்ற முன்னணி நட்சத்திரங்களை இயக்கி கவனம் பெற்றார். 

கிராமிய பின்னணியில் பல வெற்றிப் படங்களை இயக்கிய அவர், தமிழ் சினிமாவில் தமக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

இயக்குநராக மட்டுமல்லாமல், கடந்த பல ஆண்டுகளாக நடிகராகவும் பல படங்களில் நடித்து வந்தார்.

தமிழ் திரையுலகில் "இயக்குநர் இமயம்" என்று அழைக்கப்படும் பாராதிராஜாவின் மறைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. 

அவரது மறைவுக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)